கள்ளக்குறிச்சி வீரசோழபுரம் நாரீஸ்வரர் கோயிலில் இருந்து திருடப்பட்ட சிலைகள் அமெரிக்கா முயூசியத்தில்
சோழர் கால ஆறு உலோக சிலைகள் அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிப்பு. கள்ளக்குறிச்சி சிவபெருமான் கோயிலை சேர்ந்த சோழர் கால ஆறு உலோக சிலைகளை அமெரிக்காவில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். கள்ளக்குறிச்சியில் உள்ள வீரசோழபுரம் பகுதியில் அருள்மிகு நாரீஸ்வரர் என்ற சிவபெருமான் திருக்கோயிலில் இருந்து ஆறு உலோக சிலைகள் 1960 ஆம் ஆண்டு திருடப்பட்டுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கின் மூலம் கடந்த 2018 ஆம் ஆண்டு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். இந்த சிலைகளைத் தேடும் பணியில் ஈடுபட்ட சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள், பதினோராம் நூற்றாண்டைச் சேர்ந்த இராஜேந்திர சோழன் காலத்து ஒன்பது வெண்கல சிலைகளை புதுவை இந்தோ பிரெஞ்ச் நிறுவனம் ஆவணப்படுத்தியதை அதிகாரிகள் அறிந்து கொண்டனர். அது தொடர்பான விவரங்களைக் கடிதம் மூலம் அனுப்பி ஆவணங்களை ஆய்வு செய்தபோது சிலைகள் தொடர்பான புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை" பிரெஞ்சு இன்ஸ்டிடியூட் ஆப் பாண்டிச்சேரி" அளித்துள்ளது. குறிப்பாக நடராஜர் சிலை, திரிப